
இந்தியன் 2 - ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன்
கந்திகோட்டா என்பது திருப்பதியிலிருந்து 227 கி.மீ. தொலைவில் உள்ளது. பென்னாறு நதி பாயும் அழகிய பள்ளத்தாக்கு அங்கு உள்ளது. மேலும் அந்த இடத்தைச் சுற்றி காடுகளும் இருப்பதால் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. தினமும் காரில் பயணித்து அந்த இடத்திற்கு செல்ல முடியாது என்பதால் கமல்ஹாசன் சென்று வர ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுத்துள்ளார்களாம்.
"இந்தியன் 2" படம் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தற்போது படப்பிடிப்பு இடைவிடாமல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் படப்பிடிப்பு முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!