
புடவையிலும் பூஜா ஹெக்டே அழகுதான்….
"பீஸ்ட்" பட கதாநாயகியான பூஜா ஹெக்டே நேற்று அவருடைய இன்ஸ்டாவில் புடவை அணிந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அவரது அண்ணனுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது அவரும் புடவை அணிந்து, நகை அலங்காரத்துடன் எடுத்த சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவற்றிற்கான லைக்குகள் ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. வழக்கம் போல எண்ணற்ற கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.
பூஜா தற்போது சல்மான் கான் ஜோடியாக "வீரம்" ஹிந்தி ரீமேக்கான "கிசி கா பாய் கிசி கி ஜான்" படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!