
அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
அட்லீக்கும், ‛சிங்கம்" உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்த பிரியாவிற்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பிரியாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த தம்பதியருக்கு இன்று(ஜன., 31) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி பிரியா வெளியிட்ட பதிவு : ‛‛எல்லோரும் சொல்வது சரி தான். இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை. எங்களது ஆண் குழந்தை இங்கே. பெற்றோராக அற்புதமான புதிய சாகசம் இன்று துவங்குகிறது. நன்றியுடன். மகிழ்ச்சியாக.... பாக்கியமாக..."" என பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!