
கடைசி கட்ட ஓட்டத்தில் வாரிசு, துணிவு
தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், வெளிநாடுகளைப் பொறுத்தவரையிலும் இரண்டு படங்களுமே லாபகரமான படங்களாக அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். வெளி மாநிலங்களில் "துணிவு" படத்தின் வசூல் சரியாக அமையவில்லை. அதே சமயம் "வாரிசு" படம் நன்றாக வசூலித்துள்ளது.
இரண்டு படங்களும் தற்போது கடைசி கட்ட ஓட்ட நாட்களில் உள்ளன. இந்த வாரம் பிப்ரவரி 3ம் தேதி பல புதிய படங்கள் வெளிவர உள்ளன. எனவே, "வாரிசு, துணிவு" இரண்டு படங்களையும் வியாழக்கிழமையுடன் பெரும்பாலான தியேட்டர்களில் தூக்க உள்ளார்கள். சென்னை, கோவை உள்ளிட்ட சில மாநகரங்களில் மட்டும் சில தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது. இந்த வாரத்துடன் இப்படங்களுக்கான உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்துவிடும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!