
அரேபிய யூடியூபருடன் கேக் வெட்டி கொண்டாடிய மஞ்சு வாரியர்
அந்த வகையில் பிரபல அரேபிய யூடியூபர் காலித் அல் அமீரி என்பவரின் சேனலில் ஆயிஷா படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்துகொண்ட மஞ்சு வாரியர் அவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அன்புள்ள காலித் அல் அமீரி, உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களுடன் பேசி, சினிமா, பயணம் மற்றும் வாழ்க்கையின் மீதான உங்கள் அன்பைப் புரிந்துகொள்ள அற்புதமான நேரம் கிடைத்தது. மேலும் "ஆயிஷா"வைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள உண்மையான ஆர்வம் காட்டியதற்கு நன்றி. விரைவில் உங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!