
சிவகார்த்திகேயனின் பதிவு : அதிக லைக்குகளைப் பெற்று முதலிடம்
பொங்கல் தினத்தை முன்னிட்டு தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படத்திற்கு 23 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவு இது என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதை வைரலாக்கி வருகிறார்கள்.
தமிழ் சினிமா பிரபலங்கள் டுவிட்டர் தளத்தில்தான் அதிகமாக செயல்படுவார்கள். ஆனால், சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் தளமும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து "மாவீரன்" படம் வெளிவர உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் எனத் தெரிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!