
மைசூரில் நடைபெற்ற நடிகை ஹரிப்ரியா - நடிகர் வசிஷ்ட சிம்ஹா திருமணம்
வசிஷ்ட சிம்ஹா, கன்னடத்தில் பல படங்களில் நடித்தவர். தமிழில் "கரை ஓரம்" என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் "நரப்பா" மற்றும் "ஓடேலா ரயில்வே ஸ்டேஷன்" படங்களில் நடித்துள்ளார். "கேஜிஎப்" படத்தில் கமல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது அவர்களது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் அதை அறிவித்தார்கள். திருமண புகைப்படங்களை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை, ஆனாலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!