
புதிய டிஜிட்டல் வடிவில் ரிலீஸாகும் கமலின் ‛ஆளவந்தான்
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற, 2டி அனிமேஷன் காட்சிகள், பெரும் பாராட்டுக்களை பெற்றது. தயாரிப்பாளர் தாணு முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் ஆளவந்தான் படத்தை தாணு விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் . உலகம் உழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!