
கிரிமினல் ஆக கவுதம் கார்த்திக்
இந்த படத்தை பர்சா பிக்சர்ஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் மீனாட்சி சுந்தரம், கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள். தக்ஷினா மூர்த்தி ராமர் என்ற அறிமுகம் இயக்குனர் இயக்குகிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். கவுதம் கார்த்திக்குடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
மதுரையை கதை களமாக கொண்ட கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்தபடம் ஒரு கிரிமினலுக்கும், போலீஸ் அதிகாரிக்குமான மோதல் கதையாக தயாராகிறது. இதில் கிரிமினலாக கவுதம் கார்த்திக்கும், போலீஸ் அதிகாரியாக சரத்குமாரும் நடிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!