
புகை போஸ்டர்களுக்குத் தடை விதிக்கப்படுமா ?
படத்தின் விளம்பர போஸ்டர்களில் சில நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுவதும் உண்டு. தனுஷின் முந்தைய சில போஸ்டர்கள் இப்படி சர்ச்சையைக் கிளப்பின. "சர்க்கார்" படத்தில் விஜய்யின் புகை பிடிக்கும் போஸ்டர் வெளியான போது பெரும் சர்ச்சை எழுந்தது. கடந்த வருடம் "லவ் டுடே" படத்தின் போஸ்டர்களில் கூட நாயகன் புகை பிடிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டு இருந்தது.
இன்று சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் "மைக்கேல்" படத்தின் டிரைலர் வெளியீட்டுப் போஸ்டரில் விஜய் சேதுபதி சுருட்டு புகைக்கும் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. இம்மாதிரியான போஸ்டர்களை சமூக அக்கறை இல்லாமல் படக்குழுவினர் வெளியிடுவதையும், அம்மாதிரி போஸ் கொடுக்கும் ஹீரோக்களையும் சமூக ஆர்வலர்கள் கண்டிப்பது வழக்கமாக நடந்து வருகிறது. ,இப்படியான போஸ்டர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இருப்பினும் ஒரு சில ஹீரோக்கள்தான் தங்களைத் திருத்திக் கொண்டு அதைத் தவிர்க்கிறார்கள். இதில் விஜய் சேதுபதி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!