
யு டியுபில் புதிய சாதனை படைத்த பின்னணி பாடகி அல்கா யாக்னிக்
56 வயதான அல்கா யாக்னின் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். 2020ம் ஆண்டில் 16.6 பில்லியன், 2021ம் ஆண்டில் 17 பில்லியன் சாதனைகளை படைத்துள்ளார்.
2022ம் ஆண்டில் 14.7 பில்லியன் சாதனையைப் படைத்து இரண்டாம் இடத்தைப் பெறுகிறார் போர்ட்டோரிகா நாட்டின் பேட் பன்னி. இந்தியாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகர்களான உதித் நாராயண் 10.8 பில்லியன், அர்ஜித் சிங் 10.7 பில்லியன், குமார் சானு 9.09 பில்லியன் பெற்று டாப் 5ல் இடம் பிடித்துள்ளனர்.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கடந்த 40 வருடங்களாகப் பாடியுள்ளார் அல்கா. 7 முறை சிறந்த பாடகிக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவில் 12.3 பில்லியனையும், பாகிஸ்தானில் 683 மில்லியனையும் கடந்த ஆண்டில் பெற்றுள்ளார்.
யு டியுபைப் பார்ப்பவர்களைப் பொறுத்தவரையில் உலக அளவில் 25 சதவீதத்தினர். ஆசியாவைச் சேர்ந்தவர்கள் 45 சதவீதத்தினர் யு டியுபைப் பார்த்து வருகிறார்கள்.
1980ல் வெளிவந்த "பாயர் கி ஜான்கார்" என்ற படத்தில் முதன் முதலில் பாடினார் அல்கா. அதன்பின் 1981ல் அமிதாப் நடித்து வெளிவந்த "லாவாரிஸ்" படத்தின் பாடலான "மேரே அன்கன் மேய்னே" பாடல் அவரைப் பிரபலமாக்கியது. 1988ல் வெளிவந்த "தேசாப்" படத்தில் இடம் பெற்ற "ஏக் தோ தீன்" பாடல் அவரை பல மொழி ரசிகர்களிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது. ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் அல்கா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!