
கவுண்டமணி நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார் ஆரம்பம்
ஜன 20, 2023
Advertisement
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்கும் இரண்டாவது படம் " பழனிச்சாமி வாத்தியார்". இதில் நாயகனாக கவுண்டமணி நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார், நந்தகோபால் R.K. சுரேஷ், மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார் ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன். கே இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று(ஜன.,20) இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!