புதியவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சதீஷ்
Advertisement
Advertisement
புதியவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சதீஷ்
ஜன 18, 2023
அ நிறம் | அளவு
Advertisement
காமெடி நடிகராக இருந்து வந்த சதீஷ், ஹீரோவாகவும் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் நாயகனாக நடித்த முதல்படமான நாய் சேகர் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்து ஓ மை கோஸ்ட் படத்திலும் பிரதான வேடத்தில் நடித்தார். அடுத்து அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். உடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விபிஆர் இசையமைக்க, ஒயிட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் ரவீந்திரன், லலித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக வெங்கி பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!