
விஜய் படத்தில் களமிறங்கும் ‛பிக்பாஸ் ஜனனி
கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கையை சேர்ந்த ஜனனியும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம். படத்தில் இவர் விஜய்யின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்கிறார் ஜனனி.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் வழியில் இப்போது ஜனனியும் தமிழ் படங்களில் நடிக்க களமிறங்கி உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!