
கண்ணகியில் 4 ஹீரோயின்கள்
படம் பற்றி இயக்குனர் கிஷோர் கூறியதாவது: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் வெவ்வேறு தளங்களில் வாழும் பெண்கள் என்ன மாதிரியான முடிவை எடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பெண் பார்த்தல் என்கிற வைபவம் ரொம்பவே முக்கியமானது. பெண் பார்க்க வரும் மணமகன்களில் ஒருவர் என்ன காரணங்களால் நிராகரிக்கப்படுகிறார், இன்னொருவர் எந்த அடிப்படையில் மணமகனாக ஏற்கப்படுகிறார். இந்த நிகழ்வில் ஒரு மணப்பெண்ணுக்கே உரிய கட்டுப்பாடுகளும், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் எப்படி இருக்கின்றன என்பதை ஒரு பாடலின் வழியாக சொல்லியிருக்கிறோம். இந்த பாடல் மக்களால் கவனிக்கப்படும். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!