
மகேஷ்பாபு படத்தில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்த ஸ்ரீ லீலா
அது மட்டுமல்ல ஸ்ரீ லீலா இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகி அல்ல என்றும் பூஜாவும் ஸ்ரீ லீலாவும் சம முக்கியத்துவம் உள்ள இரண்டு கதாநாயகிகளாக நடிக்கின்றனர் என்பதையும் அழுத்தமாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்த படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பதிலாக தான் ஸ்ரீ லீலா இந்த படத்தில் நுழைந்துள்ளார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பெல்லி சந்தடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீ லீலா கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தமாக்கா படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!