
வெளிநாடுகளில் லாபத்தைத் தொட்ட துணிவு
அதில் அமெரிக்காவில் மட்டும் 9 லட்சம் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடி வசூலையும், மலேசியாவில் 10 லட்சம் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 8 கோடி வசூலையும், கடந்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள வினியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இங்கிலாந்தில் 2 லட்சத்து 18 ஆயிரம் பவுண்டு வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் இந்திய ரூபாய் மதிப்பு 2 கோடியே 15 லட்ச ரூபாய்.
மேலும், இப்படம் வெளியான கனடா, மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளதாக படத்தை வெளிநாடுகளில் வெளியிட்டுள்ள லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் "துணிவு" படம்தான் வெளிநாடுகளில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்றும் குறிப்பிட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!