
அமெரிக்க வசூலில் முந்தும் வாரிசு
அமெரிக்காவில் இரண்டு படங்களையும் வெளியிட்ட வினியோக நிறுவனங்கள் படங்களின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்துள்ளன. "துணிவு படம் 7 லட்சம் யுஎஸ் டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடியே 70 லட்சம். அஜித்தின் திரையுலக வரலாற்றில் அமெரிக்க வசூலில் இந்த வசூல்தான் "டாப்" என்கிறது படத்தை வெளியிட்டுள்ள சரிகம சினிமாஸ் வினியோக நிறுவனம்.
"வாரிசு, வாரசுடு" இரண்டும் சேர்த்து 9 லட்சத்து 50 ஆயிரம் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள ஷ்லோகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடியே 69 லட்ச ரூபாய். "துணிவு" படத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் "வாரிசு" படம் வசூலில் முந்தி வருகிறது. விரைவில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற வாய்ப்புள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!