
தெலுங்கில் இன்று வாரிசு பிரம்மாண்ட வெளியீடு
இந்த வருட பொங்கலுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களுடன் இந்த "வாரிசு" படத்தின் தெலுங்கு டப்பிங்கான "வாரசுடு" படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்து கடந்த சில வாரங்களாக கடும் சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக "வாரசுடு" வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அதன் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்தார்.
அதனால், பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள் வெளியானதற்குப் பின் இன்றுதான் "வாரசுடு" வெளியாகிறது. அதே சமயம் பாலகிருஷ்ணா படத்தை விடவும் இன்று அதிகமான தியேட்டர்களில் "வாரசுடு" வெளியாவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தில் மட்டும் இன்று "வாரசுடு" படத்திற்கு 300க்கும் மேற்பட்ட காட்சிகள் நடைபெற உள்ளது என்கிறார்கள். படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்குத் திரையுலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!