
அர்ஜூன் தாஸ் உடன் காதலா... - உண்மையை உடைத்த ஐஸ்வர்ய லட்சுமி
இந்த நிலையில் ஐஸ்வர்ய லட்சுமி, தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ் உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் காதல் லோகோவான ஹாட்டினையும் வெளியிட்டிருந்தார். இதனால் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது, ரசிகர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் இணைந்து எங்கேயும் தோன்றியதில்லை. அப்படி இருக்கும்போது எப்படி காதலாகியிருக்க முடியும் என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது. இது ஒருவேளை ஏதாவது ஒரு படத்தின் விளம்பர தந்திரமாக இருக்குமோ என்றும் கருதப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையே ஐஸ்வர்யா இன்னொரு பதிவை வெளியிட்டார் அதில் “நண்பர்களே எனது பதிவு இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திந்த போது ஒரு படத்தை எடுத்து பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். வதந்திகளில் கூறப்படுவது போல் எதுவும் இல்லை. நேற்று முதல் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் "அவர் உங்களுடையவர்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!