
“5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்” - யாருக்கு டிரெண்ட் செய்கிறார்கள் விஜய் ரசிகர்கள்
"வாரிசு" படத்திற்கு முன்பாக "துணிவு" படத்திற்கு சிறப்புக் காட்சிகள் நடைபெற்றதால் "துணிவு" படம் பற்றிய ரசிகர்களின் பாசிட்டிவ்வான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. அது "வாரிசு" படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துவிட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் கடும் வருத்தத்திற்கு ஆளாகினர்.
அதனால், இன்று காலையிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பல டிரெண்டிங்குகளைச் செய்து வருகின்றனர். “தளபதி விஜய், வாரிசு பொங்கல் வின்னர், பிளாக் பஸ்டர் வாரிசு" ஆகிய டிரெண்டிங்குடன் ""#5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்” என்ற டிரெண்டிங்கும் இடம் பெற்றுள்ளது. இந்த டிரெண்டிங்கில் இதுவரையில் 39 ஆயிரம் டுவீட்டுகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
படத்தில் விஜய் பேசும் ஒரு பன்ச் வசனம்தான் இந்த ""#5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்”. நேற்று "வாரிசு" காட்சிக்கு முன்பாக "துணிவு" படத்திற்கு சிறப்பு அனுமதி கொடுத்ததால் அப்படத்தை வெளியிட்ட திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மீதான கோபத்தினால் இப்படி ஒரு டிரெண்டிங்கை செய்கிறார்களா என்ற சந்தேகம் அஜித் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!