
வாரிசு, துணிவு - ஆரம்பமானது நம்பர் கேம் சண்டை
படம் வெளியான இரண்டாவது நாள் வழக்கம் போல ஆரம்பமாகும் சண்டை இன்று(ஜன., 12) காலையிலேயே ஆரம்பமாகிவிட்டது. நேற்று வெளியான இரண்டு படங்களில் எந்தப் படம் அதிக வசூலைக் குவித்தது என சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு ஒரு தொகையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். "கிங் ஆப் ஓபனிங், தளபதி விஜய்" என இரண்டு டிரெண்டிங்குகள் டுவிட்டரில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன்பு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த "பேட்ட", அஜித் நடித்த "விஸ்வாசம்" படங்களுக்கு இந்த "நம்பர் கேம்" எப்படி சண்டையாக மாறியதோ அப்படி இந்த வருட பொங்கலுக்கு விஜய்யா, அஜித்தா யார் "பாக்ஸ் ஆபீஸ் கிங்" என்ற சண்டை ஆரம்பமாகியுள்ளது. இரண்டு தயாரிப்பாளர்களும் படம் பற்றிய வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை ஏலம் விடுவது போல 20 கோடி, 40 கோடி, 50 கோடி என இன்று நிறைய கேட்கலாம்,.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!