
கையில் எப்போதும் ஜெபமாலை : ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டும் சமந்தா
அண்மையில் அவர் ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்க மும்பை சென்றபோது அவர் கையில் ஜெபமாலை இருந்தது. அதன் பிறகு அவர் ஐதராபாத்தில் சாகுந்தலம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோதும் அவர் கையில் ஜெபமாலை வைத்திருந்தார்.
ஆங்கிலோ இந்திய பெண்ணான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். என்றாலும் அதில் அதிக ஈடுபாடு இல்லாதவராக இருந்தார். புத்தாண்டு, கிறிஸ்மஸ் தினங்களில் மட்டும் தேவாலயத்திற்கு சென்று வந்தார். தற்போது மன அமைதி வேண்டியும், உடல் ஆரோக்கியம் வேண்டியும் எப்போதும் பிரார்த்தனை செய்து வருகிறார். அதனால் ஜெபமாலையை எப்போதும் கையில் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!