
உலகம் முழுதும் வெளியானது ‛துணிவு, வாரிசு திரைப்படங்கள்: 9 ஆண்டுக்கு பின் அஜித், விஜய் படங்கள் மோதல்
இயக்குனர் எச்.வினோத் - நடிகர் அஜித்குமார் கூட்டணியில் தொடர்ந்து 3வது முறையாக வந்துள்ள ‛துணிவு"படம் நடுஇரவு 1 மணிக்கும், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‛வாரிசு" படம் அதிகாலை 4 மணிக்கும் உலகம் முழுவதிலும் உள்ள திரையறங்குகளில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் முதல் காட்சியை கண்டுகளித்த அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2014ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ‛ஜில்லா" படங்கள் வெளியானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!