
புதிய சாதனை படைக்கப் போகும் துணிவு டிரைலர்
அதே சமயம் விஜய் நடித்துள்ள "வாரிசு" டிரைலர் தற்போது 41 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. "துணிவு" டிரைலர் 60 மில்லியன் பார்வைகளை ஓரிரு நாட்களில் கடந்துவிட வாய்ப்புள்ளது. அந்த சாதனையை முறியடிக்க "வாரிசு" டிரைலருக்கு மேலும் 20 மில்லியன் பார்வைகள் தேவைப்படும். நாளை படம் வெளிவந்த பின்பு டிரைலரைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே, "துணிவு" டிரைலர் நம்பர் 1 இடத்தில் சில காலம் நீடிக்கும்.
தற்போதைய பொங்கல் போட்டியில் "வாரிசு" படத்தைக் காட்டிலும் "துணிவு" படம் பல விதங்களில் முன்னணியில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!