
அஜித் வராமல் இப்படி ஒரு முன்பதிவா? - துணிவு ஆச்சரியம்
ஆனால், "துணிவு" படத்திற்காக எந்த ஒரு இசை வெளியீட்டு நிகழ்ச்சியும், பிரஸ் மீட்டும் நடத்தவேயில்லை. படத்தின் இயக்குனர் வினோத், கதாநாயகி மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் சில வீடியோ பேட்டிகளை மட்டுமே கொடுத்தார்கள். அவை மட்டும்தான் படத்திற்கான புரமோஷனாக அமைந்தது. இந்நிலையில் "வாரிசு" படத்தின் அளவிற்கு "துணிவு" படத்தின் முன்பதிவும் நடப்பது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தனது ரசிக மன்றங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கலைத்துவிட்டார் அஜித். ஆனால், விஜய் சமீபத்தில் கூட அவரது மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
ரசிகர் மன்றம் இல்லாமல், எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல் ஒரு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்குமா என்பது "துணிவு" படம் மூலம் நடந்து வருவது திரையுலகில் தனி கவனம் பெற்றுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!