
இன்று இரவே வாரிசு சிறப்புக் காட்சி
அதிகாலை சிறப்புக் காட்சியாக இன்று நள்ளிரவு 1 மணிக்கு "துணிவு" படத்தையும், அதிகாலை 4 மணிக்கு "வாரிசு" படத்தையும் நடத்த வேண்டுமென இரண்டு படங்களையும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தியேட்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் அதன்படியே சிறப்புக் காட்சிகள் நடைபெறுகின்றன.
நள்ளிரவு 1 மணிக்கே "துணிவு" காட்சி நடப்பதால் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சுக்கள்தான் முதலில் வரும். "வாரிசு" படம் பற்றிய பேச்சுக்கள் காலை 7 மணிகே வரும். இதனால் "வாரிசு" குழுவினர் வேறு ஏற்பாட்டை செய்துள்ளனர். இன்று இரவு சினிமா பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சிறப்புக் காட்சியை சென்னையில் நடத்த உள்ளார்கள். அதனால், "துணிவு" படத்திற்கு முன்பாகவே "வாரிசு" பற்றிய பேச்சுக்கள் இன்றிரவே வெளியாகிவிடும்.
இந்த விஷயத்தில் "துணிவு" படத்தை விட "வாரிசு" படத்தை முந்த வைக்க வேண்டும் என படக்குழுவினர் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளதாகத் தகவல். இந்த மாற்றத்தை "துணிவு" படத்தை மொத்தமாகவும், "வாரிசு" படத்தை ஐந்து ஏரியாக்களில் மட்டும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் அனுமதிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!