
பெங்களூருவில் துணிவு படத்திற்கு அமோக வரவேற்பு
அஜித் நடித்துள்ள "துணிவு" படத்திற்கு அதிகாலை 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. ரஜினிகாந்த்திற்குப் பிறகு அஜித் படத்திற்குத்தான் இவ்வளவு அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றதாம். அஜித் நடித்துள்ள ஒரு படத்திற்கு அதிகாலையில் காட்சி நடப்பது இதுதான் முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
இதுவரையிலும் லட்சுமி, கிருஷ்ணா, பாலாஜி, வைபவ், சீனிவாசா ஆகிய தியேட்டர்களில் 2 மணிக்கான காட்சிகளின் முன்பதிவு முழுவதுமாக முடிந்துவிட்டதாம். அதன் மூலம் மட்டுமே 20 லட்ச ரூபாய் வரையில் வசூலாகியுள்ளது என்கிறார்கள். அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் பல தியேட்டர்களில் காட்சிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் மட்டும் 40க்கும் மேற்பட்ட சிங்கிள் தியேட்டர்களிலும், 50க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் "துணிவு" படம் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!