
தெலுங்கில் அறிமுகமாகும் பிரியா பவானி சங்கர்
தற்போது தமிழில் "பத்து தல, அகிலன், ருத்ரன், டமாண்டி காலனி, பொம்மை, இந்தியன் 2" என பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் "கல்யாணம் கமநீயம்" என்ற படம் இந்த வாரம் பொங்கலுக்கு ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. சந்தோஷ் சோபன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை அனில் குமார் இயக்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் பிரியா நல்ல வரவேற்பைப் பெறுவார் என டோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!