
சூர்யா-42 படத்திற்கும் ‛வி சென்டிமென்ட் டைட்டிலை கையில் எடுக்கும் சிறுத்தை சிவா!
தற்போது வரை இந்த படத்தை சூர்யா-42 என்றுதான் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு அஜித் நடிப்பில் தான் இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்கள் வரிசையில் வி சென்டிமென்டில் ஒரு டைட்டிலை சிறுத்தை சிவா வைத்திருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் சூர்யாவின் 42வது படத்திற்கு வீர் என்று அவர் டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று தெரிகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!