
கிக் பட டப்பிங்கை முடித்த சந்தானம்!
இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். நடிகை ராகினி திரிவேதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை சர்க்கல் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை சந்தானம் நிறைவு செய்துள்ளார். தற்போது டப்பிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!