
அமெரிக்க முன்பதிவில் பின் தங்கும் வாரிசு, துணிவு
அமெரிக்காவிலும் இந்த நான்கு படங்களும் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியாகின்றன. ஆனால், தமிழ்ப் படங்களான "வாரிசு, துணிவு" ஆகிய படங்களை விட தெலுங்குப் படங்களான "வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி" ஆகிய படங்களின் முன்பதிவு அதிக அளவில் நடந்து வருகிறது.
பிரிமீயர் காட்சிகளைப் பொறுத்தவரையில் "வீரசிம்ஹா ரெட்டி" படத்திற்கான முன்பதிவு 3 லட்சம் அமெரிக்க டாலர்களையும், "வால்டர் வீரய்யா" முன்பதிவு 2 லட்சம் அமெரிக்க டாலர்களையும், "துணிவு" முன்பதிவு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும், "வாரிசு" முன்பதிவு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும் கடந்துள்ளது.
"வாரிசு" படத்தின் வெளியீட்டுத் தேதி திடீரென மாற்றப்பட்டதால் அதன் முன்பதிவு பின்தங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். பிரிமீயர் காட்சிகளுக்கு முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டுமாம். தேதி மாற்றப்பட்டதால் "வாரிசு" பட முன்பதிவில் குழப்பம் ஏற்பட்டு அது பின்னடைவைச் சந்தித்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!