
தமிழகம் முழுவதும் 1 மணிக்கு துணிவு, 4 மணிக்கு வாரிசு ?
இப்போது பேச்சுவார்த்தை மூலம் அதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நடு இரவு 1 மணிக்கு "துணிவு" படத்தையும், அதிகாலை 4 மணிக்கு "வாரிசு" படத்தை தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளாக திரையிட்டுக் கொள்ளலாமாம். காலை 8 மணி முதல் அவரவர் விருப்பப்படி காட்சிகளை திரையிட்டுக் கொள்ளுங்கள் என்று பேசி முடிவெடுத்திருப்பதாகத் தகவல்.
சிங்கிள் திரையரங்குகளில் "துணிவு" படத்தை மட்டும் ரெகுலர் காட்சிகளாகத் திரையிட ஒப்பந்தம் செய்த தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு "வாரிசு" படத்தையும், "வாரிசு" படத்தை மட்டும் ரெகுலர் காட்சிகளாக ஒப்பந்தம் செய்த தியேட்டர்களில் அதிகாலை 1 மணிக்கு "துணிவு" படத்தையும் திரையிட உள்ளார்களாம். இது எப்படி சரியாக வரும் என்று தெரியவில்லை. தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!