
துணிவு - வாரிசு ஜனவரி 11ல் நேரடி மோதல்
முதலில் "துணிவு" படம் ஜனவரி 11ம் தேதியும், "வாரிசு" படம் ஜனவரி 12ம் தேதியும் வெளியாகும் என்றுதான் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவித்தார்கள். வெளிநாடுகளிலும் அதனடிப்படையில்தான் முன்பதிவுகளும் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இப்போது "வாரிசு" படத்தை ஒரு நாள் முன்னதாகவே வெளியிட்டதால் ஜனவரி 12ம் தேதி முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக வெளிநாடுகளில் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அஜித், விஜய் இருவரது படங்களும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே நாளில் மோத உள்ளன. 2014ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அஜித் நடித்த "வீரம்", விஜய் நடித்த "ஜில்லா" ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. அப்போது அந்த இரண்டு படங்களுமே சுமாராகத்தான் ஓடின. இப்போது "துணிவு, வாரிசு" படங்களின் டிரைலர்களைப் பார்த்த பிறகு ரசிகர்களுக்கும் படங்கள் "சுமாராகத்தான்" இருக்குமோ என்ற எண்ணம் வந்துள்ளது. இரண்டு டிரைலர்களுக்கும் நெகட்டிவ்வான விமர்சனங்களும் எழுந்துள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!