
அமெரிக்கா - முன்பதிவில் துணிவு படத்தை முந்திய வாரிசு
பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவைப் பொறுத்தவரையில் "துணிவு" படத்தை விட "வாரிசு" படத்திற்கான முன்பதிவு அமோகமாக நடந்து வருகிறது. இதுவரையில் "வாரிசு" படத்திற்கு 83 இடங்களில் 192 காட்சிகளுக்கான முன்பதிவின் மூலமாக 61 ஆயிரம் யுஎஸ் டாலரும், "துணிவு" படத்திற்கு 77 இடங்களில் 148 காட்சிகள் மூலம் 32 ஆயிரம் யுஎஸ் டாலர் தொகையும் கிடைத்துள்ளதாம். இரண்டு படங்களும் வெளியாக இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் பிரிமீயர் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தெலுங்கு படங்களான "வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி" ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தமிழ்ப் படங்களான "வாரிசு, துணிவு" ஆகியவற்றிற்கான பிரிமீயர் முன்பதிவுத் தொகை குறைவாகவே உள்ளதாம். அமெரிக்காவில் தமிழர்களை விட தெலுங்கர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் ஒரு காரணம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!