
அஜித்திற்கு முதல்முறை : 200 மில்லியன் கடந்த விஸ்வாசம் - கண்ணான கண்ணே... பாடல்
2018ல் அப்பாடலின் லிரிக் வீடியோ வெளிவந்து 155 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அடுத்து வீடியோ பாடலை 2020 ஜனவரியில்தான் வெளியிட்டனர். இந்த இரண்டு வருடங்களில் வீடியோ பாடல் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் சினிமா பாடல்களில் சுமார் 10 பாடல்கள் மட்டுமே 200 மில்லியன் பார்வைகளை இதுவரை கடந்துள்ளன.
"மாரி 2" படத்தில் இடம் பெற்ற "ரவுடி பேபி" பாடல் 1400 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அஜித் நடித்த படத்தின் பாடல் ஒன்று 200 மில்லியன் பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை. அதே சமயம் விஜய்யின் "பீஸ்ட்" பாடலான "அரபிக்குத்து" லிரிக் வீடியோ 498 மில்லியன் பார்வைகளையும், "மாஸ்டர்" பாடலான "வாத்தி கம்மிங்" வீடியோ பாடல் 412 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!