
பொங்கலுக்கு இசையமைப்பாளர் தமனுக்கு டபுள் ஜாக்பாட்
அதன் பிறகு தமிழில் "ஈரம், காஞ்சனா, ஒஸ்தி, காதலில் சொதப்புவது எப்படி, தடையறத் தாக்க, சேட்டை, வாலு, தில்லுக்கு துட்டு, ஸ்கெட்ச், மகா முனி, ஈஸ்வரன்,” உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் "அலா வைகுந்தபுரம்லோ" படத்திற்குப் பிறகு மிகவும் பிஸியான இசையமைப்பாளராக மாறினார்.
இந்தாண்டு பொங்கலுக்கு தமன் இசையமைத்துள்ள இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. தமிழில் விஜய் நடிக்கும் "வாரிசு", தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் "வீர சிம்ஹா ரெட்டி" ஆகிய இரண்டு முக்கியமான படங்கள் வருகின்றன. இரண்டு படங்களுமே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இரண்டு படங்களின் பின்னணி இசை வேலைகளில் பரபரப்பாக உள்ளார் தமன்.
இதற்கடுத்து தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம், மகேஷ்பாபுவின் 28வது படம் ஆகியவை அவரது இசையில் இந்த வருடத்தின் முக்கிய படங்கள். "வாரிசு" படத்திற்குப் பிறகு தமிழிலும் அவர் முன்னணிக்கு வருவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!