
விஸ்வாசம் சாதனையை முறியடித்த துணிவு டிரைலர்
தற்போது அஜித்தின் "துணிவு" டிரைலர் "விஸ்வாசம்" டிரைலர் பார்வைகளை முந்தி 38 மில்லியன் பார்வைகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. "பீஸ்ட்" டிரைலரை முறியடிக்க இன்னும் 22 மில்லியன் பார்வைகள் தேவைப்படுகிறது. அதை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள "வாரிசு" டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது. அதனால், "பீஸ்ட்" சாதனையை "வாரிசு" டிரைலரே முறியடிக்கலாம்.
டிரைலரைப் பார்வையிடுபவர்களில் பாதி பேர் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தால் கூட அந்தப் படங்களுக்கு 400 கோடி வசூல் கிடைத்துவிடும். ஆனால், டிரைலரைப் பார்க்கும் அனைவரும் தியேட்டர்களுக்கு வருவதில்லை என்பதே உண்மை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!