
தெலுங்குப் படங்களை விட அதிக தியேட்டர்களில் வாரிசு
இது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே தெலுங்குத் திரையுலகத்தில் கடும் சர்ச்சை எழுந்தது. "வாரிசுடு" படத்திற்கு அதிக தியேட்டர்களைக் கொடுக்கக் கூடாது என்றனர். அந்த சர்ச்சைகளை மீறி தற்போது "வாரிசுடு" படம் நேரடித் தெலுங்குப் படங்களான சிரஞ்சீவியின் "வால்டர் வீரய்யா", பாலகிருஷ்ணாவின் "வீர சிம்ஹா ரெட்டி" ஆகியவற்றை விட அதிக தியேட்டர்களில் வெளியாகிறது.
உதாரணத்திற்கு முக்கிய மாநகரமான விசாகப்பட்டிணத்தில் "வாரிசுடு" படம் 8 தியேட்டர்களிலும், "வால்டர் வீரய்யா", 5 தியேட்டர்களிலும், "வீரசிம்ஹா ரெட்டி" 4 தியேட்டர்களிலும் வெளியாகிறது. முக்கிய தியேட்டர்கள் அனைத்துமே "வாரிசுடு" படத்திற்காக எப்போதோ ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!