
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா?
இந்த நிலையில்தான் ராஷ்மிகா பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கிறார் என்கிற ஒரு தகவல் தற்போது கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் ராஷ்மிகா. அங்கிருந்து வெளியே வந்து அவர் காரில் கிளம்பிச் செல்வதும் அங்கிருந்த சில புகைப்படகாரார்களுக்கு கைகாட்டி சென்றதும் என சில புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்தே அவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு தான் வந்து சென்றுள்ளார் என்று சொல்லப்பட்டு வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!