அருண் விஜய்யின் பார்டர் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போனது
Advertisement
Advertisement
அருண் விஜய்யின் பார்டர் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போனது
டிச 29, 2022
அ நிறம் | அளவு
Advertisement
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படம் திரைக்கு வந்ததை அடுத்து அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பார்டர் படம் டிசம்பரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, ஸ்டெபி பட்டேல் , பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அருண் விஜய் மற்றும் அறிவழகன் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள இந்த படம் ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு சில பிரச்சினைகளால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதம் கண்டிப்பாக வெளியாகும் என்று கூறிவந்த நிலையில், தற்போது பார்டர் படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!