
முதல் கணவரை விவாகரத்து செய்யும் எமி ஜாக்சன்
எமி ஜாக்சன் 2019ம் ஆண்டு முதல் ஜார்ஜ் பனயட்டோவ் என்ற பிசினஸ்மேனைக் காதலித்து வந்தார். அந்தாண்டு செப்டம்பரில் ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானார் எமி. அவர்களது வாழ்க்கை இரண்டு ஆண்டுகள்தான் நீடித்தது. கடந்தாண்டு இருவரும் பிரிந்ததாகச் சொல்லப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஜார்ஜ் உடன் நெருக்கமாக இருந்த அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கினார் எமி.
இந்நிலையில் தற்போது முதல் கணவரை விவாகரத்து செய்வதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறதாம். அந்த வழக்கில் கலந்து கொள்வதற்காக தற்போது அவர் நடித்து வரும் "அச்சம் என்பது இல்லையே" படத்தின் சென்னை படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் லண்டனிலியே உள்ளாராம். எமி தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!