
ஷாஜி கைலாஷ் உடன் வேட்டைக்கு கிளம்பிய பாவனா
இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படமான ஹன்ட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி உள்ளார் ஷாஜி கைலாஷ். இந்த படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்கிறார். இதன் துவக்கவிழா பூஜை இன்று(டிச., 28) நடைபெற்றது. இந்த படத்தில் பாவனா டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரர் திரில்லர் ஆக இந்த படம் உருவாக இருக்கிறது. சில ஆண்டுகளாக அதிக அளவில் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த பாவனா சில மாதங்களுக்கு முன்பு தான் என்டிக்காக்கொரு பிரேமதார்ணம் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது இந்த ஹன்ட் படத்தில் இணைந்துள்ளார் பாவனா.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!