
ஹிந்தியில் பேசியது பெற்றோருக்கு துன்புறுத்தலாம்: நடிகர் சித்தார்த் புகார்
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டதாவது: கூட்டமே இல்லாத மதுரை விமானநிலையம் வந்த வயதான எனது பெற்றோர், சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் ஹிந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது "இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்" என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!