பிரபாஸை இயக்கும் ‛புஷ்பா பட இயக்குனர்
டிச 26, 2022
Advertisement
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான "பாகுபலி" படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஹிட்டடித்த "கேஜிஎப்" படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் "சலார்" படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் "ஆதிபுரூஷ்" படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. மற்றொரு படமான புரொஜெக்ட் கே படப்பிடிப்பும் நடக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் தயாரிக்கவுள்ளார். இந்த படம் வரும் 2024-ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. சுகுமாருடன் பிரபாஸ் கூட்டணி அமைக்கவிருப்பது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது "புஷ்பா 2" படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!