
துணிவு பட புரமோஷன் ஜனவரி 1ம் தேதி நடக்கிறது! வழக்கம்போல் அஜித் மிஸ்ஸிங்கா?
இந்த நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் துணிவு படத்தின் புரமோஷன்களும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. சில பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை வருகிற ஜனவரி 1ம் தேதி சென்னையில் நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் இயக்குனர் எச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அஜித் குமாரை பொறுத்தவரை தான் நடித்த எந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், வழக்கம்போல் இந்த முறையும் மிஸ்ஸிங்தானாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!