
இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் வாரிசு?
இரண்டே முக்கால் மணி நேரப் படங்கள் என்றாலே பார்ப்பதற்கு நீண்ட நேரம் இழுப்பது போல் இருக்கும் என்ற பேச்சு எப்போதுமே உண்டு. ஆனால், இந்த 2022ல் வெளிவந்து அதிக வசூலைப் பிடித்த "பொன்னியின் செல்வன்" படம் 2 மணி நேரம் 47 நிமிடங்களும், "விக்ரம்" படம் 2 மணி நேரம் 53 நிமிடங்களும் நீளம் கொண்ட படங்கள்தான். படம் நன்றாக இருந்தால் படத்தின் நீளம் பற்றி ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள். அதிலும் விஜய் படம் என்பதால் படத்தின் நீளத்தை ரசிகர்கள் இன்னும் ரசிப்பார்களே தவிர அதைக் குறையாக நினைக்க மாட்டார்கள் என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இதனிடையே, இன்று இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!