
சூர்யா- வெற்றிமாறனின் வாடிவாசல் டிராப் ஆகிவிட்டதா?
மேலும் இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா இயக்கும் படங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது வாடிவாசல் படத்திலிருந்தும் சூர்யா விலகிவிட்டதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வாடிவாசல் படத்திற்கு சூர்யா ஏற்கனவே கால்சீட் கொடுத்திருந்த நிலையில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தொடங்கியதால் அந்த கால் சீட்டை சிறுத்தை சிவாவுக்கு கொடுத்து தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இப்படியான நிலையில்தான் தற்போது வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனபோதிலும் இந்த செய்தியை வாடிவாசல் படக்குழுவினர் மறுக்கிறார்கள். தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தை தொடங்க போகிறார். அதனால் இப்படம் ட்ராப் ஆகி விட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!