
காந்தாரியில் இரண்டு ஹன்சிகா
இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக உருவாகி வருகிறது. ஹன்சிகா இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், "ஆடுகளம்" நரேன், பிரிஜிதா, பவன், உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதையை தொல்காப்பியன் எழுதி உள்ளார், திரைக்கதையை தனஞ்செயன் எழுதி உள்ளார், வசனம் பாடல்களை ஸ்ரீசெல்வராஜ் எழுதியுள்ளார். முத்து கணேஷ் இசை அமைக்கிறார், பாலசுப்லீரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஹன்சிகா பிளாஷ்பேக்கில் அப்பாவி கிராமத்து பெண்ணாகவும், நிகழ்காலத்தில் நவநாகரீக பெண்ணாகவும் இரண்டு வேடத்தில் நடிப்பதாவும், ஒரு ஹன்சிகாவுக்கு மெட்ரோ சிரிஷ் ஜோடி எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!