
இசை அமைப்பாளர் ஆனார் டிரம்ஸ் சிவமணி
விவேக் கே.கண்ணன் இயக்கத்தில் சன்னி லியோன், ப்ரியாமணி, ஜாக்கி ஷெராப் மற்றும் சாரா நடிக்கும் "கொட்டேஷன் கேங்" என்ற படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது. படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்பை மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. க்ரைம் திரில்லர் பாணியில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!